என் தோழி !!!

அன்னை தைதுக்கொண்டிருந்தால் என் கிழிந்த சட்டையை !!!
ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும்
என் இதயம் கிழிந்தது உன் காதல் தைத்ததால் என்று !!!
என்று என் இதயம் தைக்க வருவாய் என்று காத்துகொண்டு இருகிறேன் என் தோழி !!!
என் உடைந்த இதயம் !!!

எத்தனை முறை உடைத்துவிட்டு சென்றாலும் ,
என் இதயத்தை உன் பாதங்களில் சமர்ப்பணம் செய்வேன் என் தோழி !!!
விவேகமில்ல தலைமுறை !!!

இன்றைய திருமணங்கள் காலை மண்டபத்தில் நிச்சயிக்கபட்டு
மாலை நீதிமன்றங்களில் நிராகரிக்கப் படுகின்றன !!! ( இளைய தலைமுறைகள் அனைத்திலும் அதிவேகம் தான் . )
வானவில்!!!

இயற்கையின் வர்ணஜாலம் ...
மழையின் நட்பு !!
வானவில்!!!
வாசல் தெளித்து ...
இறைவனிட்ட கோலமோ !!
வானவில்!!!
இயற்கையை வர்ணமிட ...
ஏரியபட்ட தூரிகையோ !!
வானவில்!!!
யோசனை !!!

இரவின் மடியில்
மௌனமே சுகமாய்...
தென்றல் சில்லென்று
காதருகே தாலாட்ட ...
என் விழிகள் அணைகட்டி
விடியலை நோக்கி காத்திருக்க ...
என் நெஞ்சம் மட்டும்
ஏதோ யோசித்து கொண்டிருந்தது...
(அட நாளைக்கு reopening பா hostel போகணுமே அதான்.. so sad :( )
இளைஞனே !!!

வெற்றிக்கு எல்லை நியமிக்கதே ...
அந்த வானமே உன் புகழுக்கு எல்லையாய் அமைந்திடும் !!!
மேலே பார்த்து அயர்ந்து விடாதே ...
கீழே பார்த்து அமர்ந்து விடாதே ...
சாதிக்கும் வேகத்தில் சிலந்தி வலையில் சிக்கி விடாதே ...
செயலில் விவேகம் காட்டு !!!
சிந்தனைக்கும் இடம் கொடுத்து ...
சிகரத்தில் வெற்றி கொடியை நாட்டிவிடு !!!
மயிலே!!!

வண்ண வண்ண மயிலே ...
வானவில்லின் வர்ணத்தை உன் தோகையில் சிறைபிடித்தாயோ!!!
பூக்கள் ....
வான்மரம் தூவும் வெண்ணிற பூக்கள் சேகரிப்பேன் ......
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்துவைப்பேன் ....
அப்பூக்கள் உன் கார்கூந்தல் சேர பார்த்திருப்பேன் ...
நட்பு !!!
என் சோகங்கள் பகிரும் அன்னையாய் ...
என் வெற்றியை கொண்டாடும் சுற்றமாய் ...
என் கண்ணீர் துடைக்கும் விரலாய் ...
என்னை தோல்வியில் மீட்கும் கரமாய் ....
என்றும் நீ வேண்டும் என் அருகில் ...
என் நட்பை பகிரும் என் தோழியாய் ...
காலம்
காலதேவன் மனம்வைக்கும் கனநேரம்வரை ....
உன்னை காண காத்திருபேன் ...
உன் நினைவோடு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக