என் தாய்மொழியும் உன் முன் மன்றாடி நின்றது
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிட்டாமல் ...
தனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..
I Will Type message for U..
But I wont Sent U..
I Will Dial Ur Number .
But I wont call U..
I am Feeling Lonely in ur absence..
But I wont tell U..
I just want u to feel i am hardly Missing U...
நேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....
- மௌனம்
தனிமையை உணரும் என் இதயத்திற்கு ...
அதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..
என் அன்பே
உன் அருகில் அமர்நது உன்முகம் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்
என் துயரங்கள் அனைத்தும் தொலைந்தே போகும் ...
என் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது ....
படித்தால் புரியாது ...
உணர்ந்துகொள் ...
மனிதனுக்கு புவியறையை விட ....
கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....
சங்கடங்கள் பல வந்தாலும்
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...
தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...
தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...
ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...
என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!
பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!!
கால ஓடையில் ...
நட்பெனும் ஓடத்தில் பயணிப்போம் நாம் ...
நம் வாழ்க்கை பயணம் முடியும் வரை !!!
கனவு ..
நாளைய லட்சியம் நிறைவேற இன்றே கனவு காணுங்கள்
லட்சிய கனவுகள் மெய்ப்படும் ....
இசை ....
உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்....
சிரிப்பு :-)
ஆயிரம் கோணல் மணல்களை சீராக்குகிறது ....
உதட்டின் ஓர் சிறிய வளைவு ... :-)
உன் பார்வை ..
ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் எழுதினாலும்
மௌனமான உன் ஒரு பார்வைக்கு ஈடாகாது ...
பிடித்த கவிதை ...
காதலுக்காக நீ எழுதும் கவிதைகளை விட ...
உன் தாய் தந்தை எழுதிய கவிதையான உன்னையே எனக்கு பிடித்திருக்கிறது ....
நண்பர்கள் .. காதலர்கள்
பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள் ....
நினைவுகள் ...
சிந்தனையில் சிற்ப்பமாக்கி ..
உன்னை என் கண்களில் வைதிருந்தேன் ...
ஆனால்
என் கண்களில் கண்ணீரை விட்டுவிட்டு நீ மட்டும் எங்கே சென்றாய் ..
என்றும் உன் நினைவில் நான் .....
என் இதயம் ...
குழந்தை பேசும் மொழி ...
தாய் அறிவாள் ...
பூக்கள் பேசும் மொழியை
தென்றல் அறியும் ...
ஆனால்
என் மனம் பேசும் மொழியை
உன் மனம் அறியாத ??!!
என் மனதை நீ அறிவதெப்போது ...
காத்திருக்கிறேன் நீ அறிய ...
என் மனம் ...
என் மனதை திருடி சென்ற உன்னை தேடுகிறேன் ..
என் கண்களில் சிறை வைக்க ....
உண்மையான அன்பு ....
உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும் ...
நீ மழையில் நினைந்து கொண்டே அழுதாலும் கூட ...
என்றும் நட்புடன் ...
நிலையான அன்புக்கு பிரிவில்லை
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை
உண்மையான பாசத்துக்கு தொலைவு இல்லை
நம் நட்புக்கு என்றும் மரணம் இல்லை ...
என்றும் நட்புடன் நான் ....
அம்மா ....
அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து
போகிறது,...
அம்மாவின் முகம்!
நினைவுகள் ...
உன்னை நினைக்க ஆயிரம் பொழுதுகளுண்டு
ஆனால் உன்னை மறக்க ஒரு பொழுது கூட நினைத்ததில்லை !!
என் தோழி..
என் அன்பை வார்த்தைகளால் சொல்ல ..
என் இதய அகராதியில் வார்த்தைகள் இல்லையடி ..
என் தோழி..
நிலவு !!!
மாலை நேரம் ...
இருள் சூழ்ந்த காலம் ...
வெண்ணிற பூக்கள் தூவி வரவேற்கிறது ...
இரவு தேவதையை ...
நிலவு !!!
என் இதயம் !!!
என் எண்ணமெல்லாம்
உன் வண்ணங்கள் ...
என் இசைகளில்
உன் இனிமைகள் ..
என் இதயத்தில்
உன் துடிப்புகள் ....
என் வானமெல்லாம்
உன் திசைகள் ...
ஏனெனில் ...
என் இதயம்
உன் வசம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக