புதன், 30 ஜனவரி, 2013

மொக்கை

தலைப்பு : போயிட்டு வர்றேன்ப்பா

கதை : வாசலில் அவசரஊர்தி

************************************************************

தலைப்பு : போஸ்டர் ஓட்டுபவன் கடைசிஆசை

கதை : நிஜக்கண்ணீர் அஞ்சலி

************************************************************

தலைப்பு : ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

கதை : தொலைக்காட்சி விளம்பரம்

************************************************************

தலைப்பு : ஃபுல் மீள்ஸ் கிடைக்கும்

கதை : அதான் எவ்வளவு?

************************************************************

தலைப்பு : செக்ஸாலஜி டாக்டரின் முதலிரவு

கதை : கவுன்சிலிங் ஃப்ரீ

************************************************************

தலைப்பு : முதன்முறையாக இரட்டைவேடத்தில்

கதை : சினிமாவில் மட்டும்

************************************************************

தலைப்பு : போட்டோகிராஃபர் திருமணம்

கதை : ஸ்மைல் ப்ளீஸ்

************************************************************

தலைப்பு : அடுத்தவாரம் கிரிக்கெட்மேட்ச் இருக்குடா

கதை : பெட் எவ்வளவு?

************************************************************

தலைப்பு : கனவில் ஒரு நிஜம்

கதை : நைட் வாட்ச்மேன்

***********************************************************

தலைப்பு : சலூன்காரரிடம் டெய்லர்

கதை : அளவா வெட்டுப்பா
 
தலைப்பு : ஆணாதிக்கம் புரியும் ஆண்களை மனதார வெறுக்கிறோம் - மகளிர் மன்றத்தினர்..

கதை : உடம்புக்கு ஆகாது...

************************************************************

தலைப்பு : வெளிப்படையாக இருக்க பழகுங்கள் எழுத்தாளர்களே

கதை : எழுத்திலா? நிஜத்திலா?

************************************************************

தலைப்பு : மீ த 101

கதை : பதிவரின் மொய்

************************************************************

தலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்

கதை : அசல் நாயகன்

************************************************************

தலைப்பு : ஒரு ஜாதியை சேர்ந்தவங்க என்னை அடிச்சுட்டாங்கன்னு சொன்னியே எந்த ஜாதி அவங்க?

கதை : பெண் ஜாதி

************************************************************

தலைப்பு : உடலில் இருந்து வெள்ளி உருவாகும் அதிசயம்

கதை : என்னவளின் வியர்வை

************************************************************

தலைப்பு : உயிர்கொல்லிகள் ஒன்று என்னை வாங்கியது ஒன்று நான் வாங்கியது

கதை : சிகரெட்டும் பெண்ணும்

************************************************************

தலைப்பு : விவசாயியின் நெற்றியில் வடியும் வியர்வை

கதை : அசையும் சொத்து

************************************************************

தலைப்பு : இவ்வுலகில் உள்ள ஒவ்வொருத்தனும் பைத்தியக்காரன்

கதை : தன்னை அறியாதவன்

***********************************************************

தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு

கதை : உங்களுக்கு மட்டும்


தலைப்பு : இரட்டைக் கொலைகாரன்

கதை : சிகரெட் லைட்டர்

************************************************************

தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்

கதை : கடவுளின் திருவோடு

************************************************************

தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்

கதை : வாசனை திரவியம்

************************************************************

தலைப்பு : கால்கள் வாசிக்கும் மேளம்

கதை : ஹவாய் செருப்பு

************************************************************

தலைப்பு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

கதை : டெஸ்க் டாப்(DESKTOP)

************************************************************

தலைப்பு : மருத்துவம் படிக்காதவர்களின் அறுவை சிகிச்சை வெற்றி

கதை : பிறந்தநாள் கேக்

************************************************************

தலைப்பு : அந்த நீச்சல் வீரர் வீடு எங்க இருக்குங்க?

கதை : குளத்து மேட்டுல

************************************************************

தலைப்பு : நியூஸ் ரீடர் திருமணம் 

கதை :  முக்கியச் செய்தி 

************************************************************

தலைப்பு : பூக்காரியின் விளம்பரப்பலகை

கதை : முடிந்த கொண்டை

***********************************************************

தலைப்பு : சாமியார் மடம்

கதை : விபச்சார விடுதி
 

தலைப்பு : சிக்காத காற்றும் சிக்கியது

கதை : டிஷ் ஆண்டென்னா

*************************************************************

தலைப்பு : எந்த கோவிலுக்கு வேண்டுதல்?

கதை : மொட்டை மாடி

*************************************************************

தலைப்பு : எனக்கு நானே விரித்த வலை

கதை : இண்டர் நெட்

*************************************************************

தலைப்பு : இதயம்

கதை : இசைக் கருவி 

*************************************************************

தலைப்பு : சிங்கிள் மட்டுமே எடுக்கும் ஓபனிங் ஜோடி

கதை : சூரியன் சந்திரன்

*************************************************************


தலைப்பு : விக்கெட் டூ விக்கெட் 

கதை : கிழக்கு மேற்கு

*************************************************************

தலைப்பு : வயிறு

கதை : புகையில்லா அடுப்பு

*************************************************************

தலைப்பு : தல வீட்டு விஷேசம்

கதை : ஹியர் போன்

*************************************************************

தலைப்பு : அரையுலகம்

கதை : முள் கடிகாரம்

*************************************************************

தலைப்பு : முடிதுறந்தார்

கதை : ஹேட்ஸ் ஆஃப்

தலைப்பு : ஃபால்ஸ் ஸ்டேட்மெண்ட்

கதை : ரியல் எஸ்டேட்

*************************************************

தலைப்பு : அரைக்கை சட்டை

கதை : பிறவி ஊனம்

*************************************************

தலைப்பு : நடத்துனரிடம் பிச்சைக்காரன்

கதை : சில்லரை இல்லைப்பா

*************************************************

தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்

*************************************************

தலைப்பு : டீக்குள் ஈ


கதை : ஸ்பாட் அவுட்

*************************************************

தலைப்பு : வயிற்றில் ஒரு ஏணி

கதை : சிக்ஸ் பேக்

*************************************************

தலைப்பு : புல்லாங்குழல்

கதை : செத்துப் பிழைத்தவன்

*************************************************

தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்

*************************************************

தலைப்பு : பைனான்ஸ் கம்பெனி முதலாளி

கதை : ஓடியோடி உழைக்கணும்

*************************************************

தலைப்பு : டாஸ்மாக்

கதை :  குடியிருக்கும் கோவில்
 
 

குழந்தைக்கு திருமணம்


குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுவது இந்தியாவில் தானாம்...



உலகில் நடைபெறுகின்ற குழந்தை திருமணங்களில் 40% ஆனவை இந்தியாவிலேயே நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குழந்தை திருமணங்களின் காரணமாக பால் பேதங்காட்டல் தன்மைகள், கல்வியினை தொடர முடியாத நிலைகள், அத்துடன் உயர்வேகத்தில் சிசு மற்றும் தாய் மரணங்கள் ஆகியவற்றின் காரணமாக சமூகத்துக்கு ஒவ்வாத நிலைவரங்கள் சுழற்சிமுறையில் பாதிப்பினை ஏற்படுகின்றது.
யுனிசெப் அறிக்கையின் பிரகாரம், பால் அடிப்படையினை மையமாகக் கொண்டு பேதங்காட்டல் நிலையின் காரணமாக தாய்மைக்குரிய பெண்ணின் சுகாதாரத்தில், இவை நேரடி தாக்கங்களினை ஏற்படுத்துகின்றது. பெண்களும்,சிறுமிகளும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் மறுதலிக்கப்படுகின்றது, மேலும் மேலதிக சுகாதார வசதிகளினை பெற்றுக் கொள்வதினை/தேடிக் கொள்வதினை தடுக்கின்றன, முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதினை தடை செய்கின்றது. இதன் காரணமாக பெண்களின் சுகாதாரத்திலும், அவர்களுக்கு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.
தாய்மார்களுடையதும், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளினதும் வாழ்வினைப் பாதுகாப்பதற்காக மருத்துவ வசதிகள் தலையிட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றின் உண்மையான வினைத் திறனாகப் பேணுவதற்கும், இந்த தலையீடுகளுக்கும், பெண்களின் உரிமைகளுக்காக சமூக ஒத்துழைப்புக்கள் வேண்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம், பெண்களினதும், குழந்தைகளினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அத்துடன் தரமான கல்வியினை வழங்க வேண்டும், துஷ்பிரயோகங்கள், சுரண்டல் நிலைகள், பேதங்காட்டல் நிலைகள், வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து பெண்களினைப் பாதுகாத்தல் வேண்டும், அத்துடன் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களினை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும் ஆகியவற்றினை குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

தற்சமயம், கல்விகற்ற பெண்கள் காலம் தாழ்த்தியே திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். அவர்களின் குழந்தைகள் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதையும், மேலும் அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கு தேவையான போசணைகள் தொடர்பாகவும் அறிந்து வைத்திருக்கின்றார்கள், அத்துடன் அவர்கள் பாதுகாப்பான குழந்தைப் பிறப்பு இடைவெளி செயற்பாடுகளினையும் தெரிவுசெய்கின்றார்கள்.
இந்த விடயங்கள் படித்த பெண்களினதும், படிக்காத பெண்களினதும் குழந்தைகளில் செல்வாக்கு செலுத்துகின்றது.

தாய்க்குரியதும், புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளினதும் சுகாதாரத்துக்காக சிவில் சமுகத்தின் பங்கு முக்கியமானதாகும். இதற்காக சுகாதார செயற்பாடுகளின் அபிவிருத்திக்காக முன்னுரிமை சமுக ஒத்துழைப்பு அவசியமாகும். தனிப்பட்ட குடும்பங்கள்,பெண்கள், சமுகத்தினையும் உள்வாங்கி சுகாதார செயற்பாடுகளில் செயற்படுதல் முக்கியமானதாகும்.



இன்றைய நிலைவரப்படி கிராமப்புறங்களில் குழந்தைப்பருவ திருமணங்கள் அதிகரித்தவண்ணம் செல்கின்ற நிலையினை கண்கூடாக காணமுடியும். ஆகவே சமுகத்தின் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது இந்த சமுதாயத்திலுள்ளவர்களின் கடப்பாடாகும்.

உலக பழமொழிகள்


புதிய மொழி

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர்ற கொசு மாதிரி தூங்கவும் முடியாது துரத்தவும் முடியாது.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது

செவ்வாய், 29 ஜனவரி, 2013

என் தோழி !!! 



அன்னை தைதுக்கொண்டிருந்தால் என் கிழிந்த சட்டையை !!!
ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும்
என் இதயம் கிழிந்தது உன் காதல் தைத்ததால் என்று !!!
என்று  என் இதயம் தைக்க வருவாய் என்று காத்துகொண்டு இருகிறேன் என் தோழி !!!

என் உடைந்த இதயம் !!! 




எத்தனை முறை உடைத்துவிட்டு சென்றாலும் ,
என் இதயத்தை உன் பாதங்களில் சமர்ப்பணம் செய்வேன் என் தோழி !!!

விவேகமில்ல தலைமுறை !!! 




இன்றைய திருமணங்கள் காலை மண்டபத்தில் நிச்சயிக்கபட்டு
மாலை நீதிமன்றங்களில் நிராகரிக்கப் படுகின்றன !!! ( இளைய தலைமுறைகள் அனைத்திலும்  அதிவேகம் தான் . ) 

வானவில்!!! 



இயற்கையின் வர்ணஜாலம் ...
மழையின் நட்பு !!
வானவில்!!!

வாசல் தெளித்து ...
இறைவனிட்ட கோலமோ !!
வானவில்!!!

இயற்கையை வர்ணமிட ...
ஏரியபட்ட தூரிகையோ !!
வானவில்!!!
  

யோசனை !!! 



இரவின் மடியில்
மௌனமே சுகமாய்...
தென்றல் சில்லென்று
காதருகே தாலாட்ட ...
என் விழிகள் அணைகட்டி
 விடியலை நோக்கி காத்திருக்க ...
என் நெஞ்சம் மட்டும்
ஏதோ யோசித்து கொண்டிருந்தது...
(அட நாளைக்கு reopening பா hostel  போகணுமே அதான்.. so sad  :( )  

இளைஞனே !!! 



வெற்றிக்கு எல்லை நியமிக்கதே ...
அந்த வானமே உன் புகழுக்கு எல்லையாய் அமைந்திடும் !!!
மேலே பார்த்து அயர்ந்து விடாதே ...
கீழே பார்த்து அமர்ந்து விடாதே ...
சாதிக்கும் வேகத்தில் சிலந்தி வலையில் சிக்கி விடாதே ...
செயலில் விவேகம் காட்டு !!!
சிந்தனைக்கும் இடம் கொடுத்து ...
சிகரத்தில் வெற்றி கொடியை நாட்டிவிடு !!! 

மயிலே!!! 



வண்ண வண்ண மயிலே ...
வானவில்லின் வர்ணத்தை உன் தோகையில் சிறைபிடித்தாயோ!!!

பூக்கள் .... 

வான்மரம் தூவும் வெண்ணிற பூக்கள் சேகரிப்பேன் ......
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்துவைப்பேன் ....
அப்பூக்கள் உன் கார்கூந்தல் சேர பார்த்திருப்பேன் ...

நட்பு !!!

என் சோகங்கள் பகிரும் அன்னையாய் ...
என் வெற்றியை கொண்டாடும் சுற்றமாய் ...
என் கண்ணீர் துடைக்கும் விரலாய் ...
என்னை  தோல்வியில் மீட்கும் கரமாய் ....
என்றும் நீ வேண்டும் என் அருகில் ...
என் நட்பை பகிரும் என் தோழியாய் ...

காலம் 

காலதேவன் மனம்வைக்கும் கனநேரம்வரை ....
உன்னை காண காத்திருபேன் ...
உன் நினைவோடு ...

 


வலி

துன்பத்தின் வலியை அனுபவித்ததில்லை
உன் கண்ணீர் துளிகளை காணும் வரை... 

அம்மா 

சிகரங்கள் பல தொட்டாலும்,
உயரங்கள் பல கடந்தாலும் ,
உன் மடி தேடும் சிருமியாய் நான்...

 

 

புத்தகம் 

தேர்வு நாட்களில் பொக்கிஷமாய்

பிறநாட்களில் தலையணையாய்
                                                        -புத்தகம்

 

 

பள்ளி... கல்லூரி... 

  பள்ளி நாட்களில் சுற்றித்திரிந்தேன்

                           கல்லூரி கனவுகளுடன் ...
கல்லூரி நாட்களில் சுற்றித்திரிந்தேன்
                         பள்ளியின் நினைவுகளுடன் ...


 

 

உன்னால் ...!!! 

ஒற்றை பார்வை வீசிசென்றாய்
        எந்தன் இதயம் வீல்திசென்றாய் ...
ஒற்றை வார்த்தை பேசிப்போனாய்
        ஒரு சொல்லால் வாழ்வின் அர்த்தம் சொன்னாய் ...
நித்தம் நித்திரை கலைவதென்ன
          சிந்தையில் நீயும் நிறைவதென்ன ...
நித்தம் நீ பேசும் மொழி கேட்டு
        எந்தன் இதயம் துள்ளக்கண்டேன் ....
கஷ்டங்களை இஷ்டமாய் ஏற்றுகொண்டேன்
        எந்தன் அருகில் நீ இருந்தால் ....


 

 

என் வாழ்வின் .. 

பூமியில் என் முதல் உறவு - அம்மா

பூமியில் என் முதல் காதல்  - அப்பா

பூமியில் என் முதல் நட்பு  - அக்கா

பூமியில் என் முதல் பொக்கிஷம்  - தங்கை

பூமியில் என் முதல் அரவணைப்பு  - அண்ணா


பூமியில் என் முதல் அன்பு  - தம்பி

பூமியில் நான் விரும்பிய உறவு - தோழி





தனிமை... 


தனிமையை உணரும் என் இதயத்திற்கு ...
அதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..

 

 

மௌனம் 

நேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....

- மௌனம்

 

 

எழில்

 என் தாய்மொழியும்  உன் முன் மன்றாடி நின்றது
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிட்டாமல் ...


மௌனம் 

தனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..

Miss U

 I Will Type message for U..

But I wont Sent U..

I Will Dial Ur Number .

But I wont call U..

I am Feeling Lonely in ur absence..

But I wont tell U..

I just want u to feel i am hardly Missing U...

 

மௌனம்





நேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....

- மௌனம்

தனிமை...

தனிமையை உணரும் என் இதயத்திற்கு ...
அதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..


என் அன்பே 
உன் அருகில் அமர்நது உன்முகம் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்
என் துயரங்கள் அனைத்தும் தொலைந்தே போகும் ...

என் கண்ணீர்...

என் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது ....
படித்தால் புரியாது  ...
உணர்ந்துகொள் ...   

 

 















மனித வாழ்வு !!!

மனிதனுக்கு புவியறையை விட ....
       கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....

 












நட்பு ...

சங்கடங்கள் பல வந்தாலும்
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...




கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...

தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...

தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...

ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...

என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!

பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!!

ஓர் பயணம் ...

கால ஓடையில் ...
    நட்பெனும் ஓடத்தில் பயணிப்போம் நாம் ...

      நம் வாழ்க்கை பயணம் முடியும் வரை !!!

கனவு .. 

நாளைய லட்சியம் நிறைவேற இன்றே கனவு காணுங்கள்
லட்சிய கனவுகள் மெய்ப்படும் ....

இசை .... 

உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்....  

சிரிப்பு :-) 

ஆயிரம் கோணல் மணல்களை சீராக்குகிறது ....
உதட்டின் ஓர் சிறிய வளைவு ... :-)  

உன் பார்வை .. 

 ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் எழுதினாலும் 
மௌனமான  உன்  ஒரு  பார்வைக்கு ஈடாகாது ...   

பிடித்த கவிதை ... 

காதலுக்காக நீ எழுதும் கவிதைகளை விட ...
உன் தாய் தந்தை எழுதிய கவிதையான உன்னையே எனக்கு பிடித்திருக்கிறது ....  

நண்பர்கள் .. காதலர்கள் 

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள் ....  

நினைவுகள் ... 

சிந்தனையில் சிற்ப்பமாக்கி ..
உன்னை என் கண்களில் வைதிருந்தேன் ...
ஆனால்
என் கண்களில் கண்ணீரை விட்டுவிட்டு நீ மட்டும் எங்கே சென்றாய் ..
என்றும் உன் நினைவில் நான் .....  

என் இதயம் ... 

குழந்தை பேசும் மொழி ...
தாய் அறிவாள் ...
பூக்கள் பேசும் மொழியை
தென்றல் அறியும் ...
ஆனால்
என் மனம் பேசும் மொழியை
உன் மனம் அறியாத ??!!
என் மனதை நீ அறிவதெப்போது ...
 காத்திருக்கிறேன்   நீ அறிய ...  

என் மனம் ... 

என் மனதை திருடி சென்ற உன்னை தேடுகிறேன் ..
என் கண்களில் சிறை வைக்க ....  

உண்மையான அன்பு .... 

உண்மையான அன்புக்கு மட்டுமே
 உன் கண்ணீர் துளிகள் தெரியும் ...
    நீ மழையில் நினைந்து கொண்டே அழுதாலும் கூட ...

என்றும் நட்புடன் ...

நிலையான அன்புக்கு பிரிவில்லை
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை
உண்மையான பாசத்துக்கு தொலைவு இல்லை
நம் நட்புக்கு என்றும் மரணம் இல்லை ...
என்றும் நட்புடன் நான் ....  

அம்மா .... 

அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து
போகிறது,...
அம்மாவின் முகம்!

நினைவுகள் ... 

உன்னை நினைக்க ஆயிரம் பொழுதுகளுண்டு
ஆனால் உன்னை மறக்க ஒரு பொழுது கூட நினைத்ததில்லை !!  

என் தோழி.. 

என் அன்பை வார்த்தைகளால் சொல்ல ..
என் இதய அகராதியில் வார்த்தைகள் இல்லையடி ..
என் தோழி..  

நிலவு !!! 

மாலை நேரம் ...
இருள் சூழ்ந்த காலம் ...
வெண்ணிற பூக்கள் தூவி வரவேற்கிறது ...
இரவு தேவதையை ...
நிலவு !!!  

என் இதயம் !!! 

என் எண்ணமெல்லாம்
உன் வண்ணங்கள் ...
என் இசைகளில்
உன் இனிமைகள் ..
என் இதயத்தில்
உன் துடிப்புகள் ....
என் வானமெல்லாம்
உன் திசைகள் ...
ஏனெனில் ...
என் இதயம்
உன் வசம் ... 

 

 

 

 


 

 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

செல்போனில் எப்படி பேசுவது ?



>> செல்போன் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு.  நகரம் தொடங்கி குக்கிராமம் வரை செல்போன் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது,  அவசியமான ஒன்றுதான்  என்பதில் சந்தேகம் இல்லை. வெளியே கிளம்பும் போது money purse எடுக்கிறோமோ இல்லையோ முதலில் போன் ஐ தான் எடுப்போம


ஆனால் செல்போன் ஐ எந்த இடத்தில் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதை வைத்துதான் அது இன்பமா, இம்சையா என்று சொல்ல முடியும்.


நாம் பஸ்சில் போகும்போது பல செல்போன்களின் ஒலியை கேட்கலாம். மிக ஒரு சிலரே போன்ஐ எடுத்து 'நான் பிரயாணத்தில் இருக்கிறேன், அப்புறம் கால் பண்றேன்னு' சொல்லிட்டு வச்சிடுறாங்க.   ஆனால் சிலர் இருக்காங்களே,  அவங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.  அப்போதுதான் பேச நேரம் கிடைத்தது மாதிரி வளவளனு பேசிட்டே இருப்பாங்க,  தங்களை சுற்றி பலர்  இருக்காங்களே, அவங்களுக்கு தொந்தரவாக இருக்காதா அப்படி எல்லாம் யோசிப்பதே இல்லை.


அதைவிட கொடுமை என்னன்னா பஸ்சின் சத்தத்தில எங்கே நம்ம குரல் எடுபடாம போயிடுமோனு, வேற தொண்டை  கிழிய கத்துறது......   சில நேரம் காது கூசகூடிய வார்த்தைகளும் வந்து விழும்.....  பக்கத்தில பெண்கள் இருக்கிறாங்கனுகூட பார்ப்பது இல்லை,   அரசியல்வாதி கையில மைக் கிடைச்சமாதிரி nonstop ஆக போய்ட்டே இருக்கும் .


சமீபத்தில ஒரு பெண்மணி தனது நாத்தனாரை பற்றி தனது மற்றொரு உறவினரிடம் குறை சொல்லி சரியாக 15 நிமிடம் மூச்சு விடாம பேசினாங்க......  அவங்க வீட்டல எத்தனை பேர், என்ன வேலை பார்கிறாங்க,  அவங்க வசதி எப்படி என்பது எல்லாம் இப்ப எனக்கு அத்துபடின்னா பார்த்துகோங்க,  அந்தம்மா எவ்வளவு விவரமா பேசி இருப்பாங்க  என்று....!  இடையில சில அசிங்கமான வார்த்தைகள் வேறு!!


பொது  இடத்தில சிகரெட் பிடிக்ககூடாது என்று சட்டம் போட்ட மாதிரி பொது  இடத்தில செல்போன் பேசக்கூடாது என்று சட்டம் போட்டாலும் தேவலாம் என்று தோணுது.  அந்தளவுக்கு அநாகரீகம்.......


சிலர் நான் பாங்க்க்கு பணம் எடுக்கத்தான் போறேன் அப்படீன்ற மாதிரி மிக தெளிவா பேசினா என்னவாகும்,  திருடனை வா என்று கூப்பிடுவது போல் இருக்கும்.  மேலும் பெண்கள் குடும்ப விசயங்களை வெளியில் பேசுவதால் பல தொல்லைகளை சந்திக்க வேண்டிஇருக்கும்.  வித விதமா  எப்படி ஏமாத்துவது என்பதில் பலர் டாக்டர் பட்டமே வாங்கி இருக்காங்க என்பதை நாம் மறந்து விட கூடாது.


செல்போன் வந்ததால் பேசிகொண்டே ரயிலை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததால் ரயில் மோதி இறந்த இளம்பெண்ணை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமுடியாது.....


பஸ், ரயிலில் போகும் போது அவசியம் ஏற்பட்டால் தவிர செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நலம். அப்படியே பேசினாலும் மெதுவான குரலில் ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்வது நலம்.  எங்கும் எப்போதும் நம் அந்தரங்கம் காக்கப்படவேண்டும்.


பொது இடத்தில் இருக்கும் போது செல்போன் அழைப்பு வந்தால் ஒரு நொடி தாமதித்து முக்கியமான போன் என்றால் மட்டுமே பேசவேண்டும். நம்மை பலர் உற்று நோக்குகிறார்கள் என்ற உணர்வு எப்போதும் இருந்தால் நல்லது.  வார்த்தைகளும் மெதுவாக வரும், விரைவாகவும் பேசி முடிப்போம்.


பிறரை விட காதலர்கள் ஓரளவு பரவாஇல்லை,  அடுத்தவர்கள் கேட்டுவிட கூடாது என்று வாயை கையால் மூடிக்கொண்டு பேசுகிறார்கள்....! அவர்களின் கண்களுக்கு மட்டும்தான் அருகில் இருப்பவர்கள் தெரிகிறார்கள் போல.....!!  ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு........!?
 

தாம்பத்தியம்

'தாம்பத்தியம்' என்ன ஒரு அழகான வார்த்தை,  இந்த வார்த்தைக்கு உண்மையில்  என்ன அர்த்தம் என்பது கூட பலருக்கு  தெரிய வாய்ப்பு இல்லை , அப்படி இருக்கும்போது இந்த தலைப்பில் நான் எழுதினால் எப்படி என்று எனக்குள் ஒரு தயக்கம்.  ஆனால் கணவன் மனைவி உறவு பற்றி சொல்லும்போது இதைவிட சிறந்த தலைப்பு வேறு இருப்பதாக எனக்கு தோணவில்லை. இந்த ஒரு வார்த்தை பலருக்கு பலவிதமா தெரியலாம். படிக்க  படிக்க உங்க வீட்டு கதை போலகூட தெரியலாம்.  



என்னடா ஆரம்பத்திலேயே இப்படி குழப்புறாங்க  என்று நினைக்காதிங்க  .  தாம்பத்தியம் கூட தொடக்கத்தில் தம்பதியருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல  ஒரே குழப்பமாகத்தான் இருக்கும்.  போக போக முத்து எடுக்கத்தான் சம்சார சாகரத்தில் விழுந்திருக்கிறோம் என்பது புரியும்.  சிலர் எடுப்பது முத்தாக இருக்கும், பலருக்கோ வெறும் சிப்பியாக ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது.  முத்தை மட்டும்தான் தேடவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துவிட்டால் ஏமாற இடம் இருக்காது. 


இந்த உறுதி இல்லாததால் தான் பலர் இன்று விவகாரத்திற்காக கோர்ட் படி ஏறுகிறார்கள்.
கோர்ட் வரை போக வழி இல்லாதவர்கள் அதாவது கெளரவம் பார்த்துகொண்டு ஏதோ வாழ்ந்து (மனதிற்குள் வெந்து)  கொண்டிருக்கிறார்கள்.


பிறப்பு ஒரு முறைதான் இந்த வாழ்க்கையும் ஒருமுறைதான்,  (ஏழு ஜென்மம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,  அத்தனை ஜென்மம்  எடுத்தவர்கள் யாராவது உள்ளேன் ஐயா என்று சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்)  நம் வாழ்கை ஓட்டத்தை நாம்தான் நன்றாக ஓடி முடிக்கவேண்டும்.  அதற்கு கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் துணை இருக்க வேண்டும். அவ்வளவுதான்.


அப்போதுதான் இருவரின் ஓடு பாதையை  பின்பற்றி வரும் அவர்களின் வாரிசுகள் வெற்றி பெறமுடியும்.  அப்படி வெற்றி பெற்ற வாரிசுகளால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும்.  ஆக ஒரு நல்ல சமுதாயதிற்கு அடிப்படை நல்ல குடும்பம்.  சமூகம் சரி இல்லை என்று குறை கூறுபவர்கள் முதலில் தங்களது வீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதை சரி செய்தாலே போதும்.


எதிர்பார்ப்புகள் :


முரண்பாடுகள் நிறைந்ததுதாங்க வாழ்க்கை. கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே பலவித எதிர்பார்ப்புகள் ஒருவர்மேல் ஒருவருக்கு இருப்பது தப்பு கிடையாது ஆனால் நம்முடைய எண்ணம் போலத்தான் இருக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு விதத்தில் ஆர்வகோளாறுதான்.  ஒரே  கருப்பபைஇல் வளர்ந்து பிறந்த குழந்தைகளின் செயல்களிலேயே வேறுபாடு இருக்கிறப்ப வேறுவொரு சூழ்நிலையில் வேற குடும்ப பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த துணையிடம் மட்டும் ஒத்த எண்ணங்கள் இருக்கணும் என்று நினைக்கிறது எப்படிங்க சரியாயிருக்கும்.   


நான் தொழிலில் பெரிதாக சாதித்தேன்,  கம்பெனிஐ  உயர்த்த கடினமாக உழைத்தேன் பொருளாதாரத்தில் உயர்ந்த  இடத்தில் இருக்கிறேன், நான் வெற்றியாளன் என்று  பெருமையாக சொல்லலாம்,  ஆனால் அதை மட்டுமே முழு வெற்றியாக கருத முடியாது. உங்கள் குடும்ப வாழ்க்கை  வெற்றிகரமாக நடக்கிறதா என்பதற்கு சரியான பதில் உங்களிடம் இருக்கிறதா?  உங்கள் பதில் ஆம் என்று இருந்தால் மட்டுமே நீங்கள் முழு வெற்றியாளன்.  இல்லை என்று இருந்தால் நீங்கள் வெற்றி என்று நினைப்பது வெறும் கானல் நீர்தான்.     குடும்ப வாழ்வில் நிறைவு பெறாமல் அந்த சந்தோசத்தை உணராமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.......?


பொதுவா எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே வாழ்க்கை சுவைக்காது.  ஆற்றின் நீரோட்டத்தை போல இயல்பா இருக்கணும்.  பள்ளம் இருந்தால் இறங்கியும் மேடு வந்தால் மேட்டில் ஏறியும் மண்ணின் நிறத்திற்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றியும் ஒரே சீராக ஓடி கடலில் சேரும் ஆறு போல இருக்க ஏன் சில பெண்களால் முடிவது இல்லை என்று தெரிவது இல்லை.  


என் குடும்பம்: 


எனது குடும்பத்தை எடுத்து கொண்டால் எனக்கும் என் கணவருக்கும் பல விசயங்களில் கருத்துகள் ஒத்து போகாதுதான், இருந்தாலும் எது எல்லாம் ஒத்து வரவில்லை என்று உட்கார்ந்து பட்டியல் போட மாட்டோம்.  ஒரு சில நேரங்களில் என் கருத்தை அவரும் அவர் கருத்தை நானும் ஏற்று கொண்டு விடுவோம்.  வேற வழி......! குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கனும் என்றால் இந்த மாதிரி small adjustment
செய்துதான் ஆக வேண்டும்.  


அப்படி எல்லாம் முடியாது என்று வாதம் செய்து கொண்டிருந்தால் வார்த்தைகள் தடிக்கும், மோதல் அதிகரிக்கும், இறுதியில் நாலு சுவத்துக்குள் பாராமுகம்.  பெண்களாகிய நாம் வாதத்திற்கு சளைத்தவர்கள் இல்லை, மூச்சுவிடாமல் ஒரு மணி நேரம்கூட பேசுவோம்,  அத்தனையையும்  பொறுமையாக ஆண்கள் கேட்பார்கள் ஆனால் இறுதியாக அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் நாம் துடித்து போய்விடுவோம்.  பதில் சொல்ல தோணாது, அப்புறம் எதற்காக சண்டை என்பதை மறந்து விட்டு என்னை பார்த்து இப்படி சொல்லி விட்டாரே  என்று மனம் ஒடிந்து போனதுதான் மிச்சம்.  


வேற்றுமையில் ஒற்றுமை


நான் இந்திய நாட்டில் பல இன, மொழி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் எல்லோரும் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம் அல்லது ஒற்றுமையாய் இருப்பதுபோல் தோன்றுகிறோம் இல்லையா.....?   அதைபோலத்தான் குடும்பமும் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும்,  வெளியில் இருந்து பார்க்கும்போது ஒற்றுமையாக இருப்பது போலாவது தெரியவேண்டும்.  அப்போதுதான் மூன்றாம் நபரின் தலையீடு என்பது குடும்பத்திற்குள் இருக்காது.  (நானும் கள்ளகாதல் என்ற தலைப்பை எழுத வேண்டிருக்காது)   அந்த மூன்றாம் நபர் ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


கணவரை பற்றி எப்போதும் குறைச் சொல்லிகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம், ' குடும்பம்னா அப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க,  அவர் நடந்துக்கிற விதம் பிடிக்கலைனாலும் பிடிச்சமாதிரி இருந்துகோங்க, அப்பதான் பிரச்சனை வராதுன்னு'  சொன்னதுக்கு அந்த பெண் கொஞ்சங்கூட யோசிக்காம, ' அப்ப என்னை நடிக்க சொல்லுறீங்களா, எனக்கு வேஷம் எல்லாம் போட தெரியாது' ,  என்று கன்னத்தில அறைந்த மாதிரி சொல்லிட்டாங்க.   இப்படி சொல்லும் இவர்கள் யதார்த்தம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அறிவிலிகள் என்றுதான்  சொல்வேன்.


எது நடிப்பு.....?  ஷேக்ஸ்பியர் சரியாதான் சொன்னார், ' உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்',  இது சத்தியமான வார்த்தை.  நம் அன்றாட வாழ்வில் யார்தான் நடிக்கவில்லை, என்னிடம் பேசிய அந்த பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன்.  நாம் கடவுளிடம் கூட, " நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை" என்று கேட்கும்போது நடிக்கிறோம்.  பணிபுரியும் இடத்தில் மேலதிகாரி மேல் நமக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் வெளி காட்டிகொள்ளாமல், சிரிச்சிட்டே அவர் வரும்போது எழுந்து வணக்கம் சொல்லும்போது நடிக்கிறோம்,  பிடிக்காத உறவினர்கள் வீட்டிற்கு  வந்தால் சந்தோசமாக வரவேற்று நடிக்கிறோம், இதை மாதிரி உதாரனங்களை சொல்லிட்டே போகலாம்.  முக்கியமா எல்லோரிடமும் நான் ரொம்ப பெர்பெக்ட் என்ற மாதிரி ஒரு முகமூடியை  அணிந்துகொண்டு நடிக்கவில்லையா?      


அனைவருக்குமே மற்றவர்களின் முன் சிறப்பாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்கும்.  அதேபோல் பெண்களுக்கு, நம் கணவரின் முன்னால் நல்லவிதமாக அவருக்கு பிடித்த  மாதிரி நடக்க வேண்டும் என்று ஏன்  தோன்றுவது இல்லை.
குடும்ப பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் இல்லை.  நான் ஏன் முதலில் பெண்களை வைத்து மட்டும் சொல்கிறேன் என்றால் நல்லவிதமாக எடுத்து சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டு திருத்திகொள்வார்கள்,  ஆனால் ஆண்கள்..........!  

ஆபத்தான கலாச்சாரம்.....!



நம் இந்திய கலாச்சாரம் பிற நாட்டினரும் பார்த்து பொறாமை பட கூடிய அளவில் தான் இருந்தது சிறிது காலம் வரை....!? அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமண வழக்கங்கள். மோதிரம், தாலி என்று எந்த முறையில் நடந்தாலும் எல்லா திருமணங்களும் பதிவு செய்ய பட்டுதான் வருகிறது, அதுவே கணவன், மனைவி இருவருக்கும் ஒரு சமூதாய அங்கீகாரமாகும்.  அதுவே முறையான திருமணமாக இருக்கிறது .எல்லாவற்றிலும் மேலை நாட்டினரை பார்த்து முன்னேறி (பின்னேறி) பழகி போன சிலரால் ஒரு புது கலாச்சாரத்தையும் பின்பற்றுவது என்பதும்  சரியானதாகவே தான் தெரிகிறது போலும். 

அப்படிப்பட்ட ஒரு புது கலாசாரம் தான் LIVING TOGETHER  என்று சொல்லகூடிய ஒன்று.  மனதிற்கு பிடித்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது....!!எப்போது இருவருக்கும் ஒத்து போகவில்லையோ அப்போதே பரஸ்பரம் பேசி  'இனி நண்பர்களாக மட்டும் இருப்போம்' என்று சொல்லி பிரிவது....?! இது என்ன கொடுமைங்க...!!? சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந்த கலாசாரம் பரவி கொண்டிருக்கிறது என்பதை பத்திரிக்கைகளின் மூலம் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டது.

ஒருவேளை  இந்த மாதிரியான வாழ்க்கையில் தவறி குழந்தை ஏதும் பிறந்து விட்டால், பிரிந்த பின் அந்த குழந்தையை என்ன செய்வார்கள்....! ஏதும் பிரச்னை என்றால் உதவிக்கு யாரிடம் செல்வார்கள்....?! இது எந்த அளவுக்கு  அந்த பெண்ணிற்கு பாதுகாப்பை கொடுக்கும்......? அல்லது எதுவரை...??! முறையான திருமணம் முடித்த  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்னை என்றால் வீட்டு பெரியவர்கள் பேசி தீர்த்து வைப்பார்கள், அல்லது முடியாத பட்சத்தில் போலீஸ் ஸ்டேஷன், அதையும் மீறி போனால் கோர்ட்  உதவியை  நாடுவார்கள்.

ஆனால் இது எதை பற்றியும் ஒரு கவலை இல்லாமல் படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.

இந்த முறையானது 'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும்  'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்.

இப்படி பட்ட ஒரு முறை தவறு என்றே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி உள்ளது. இந்த மாதிரி சேர்ந்து வாழ்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை. மேலும் இந்த மாதிரி வாழ்பவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கோர்டில் வழக்கு தொடர்ந்தாலும் செல்லுபடியாகாது. மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மாதிரியான உறவுகள் வராது என்றும் திடமாக தீர்ப்பு அளித்துவிட்டனர்.  இந்த தீர்ப்பு தான் இப்போது நம்மவர்களின் பொழுது போக்கு நேர பேச்சே....!

எது கலாசாரம்...?

இனி வரும் தலைமுறையினர் பண்பாடு  , கலாசாரம்னு சொல்றங்களே அப்படினா என்ன என்று கேட்க கூடிய நிலையில் இருப்பது வருத்தம் தான்.  பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பை கற்க வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒழுக்கம், பண்பாடு, விருந்தோம்பல் பண்பு, நம் கலாசாரம் போன்றவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும். (இதை கற்று கொடுக்க ஏதாவது கோச்சிங் சென்ட்டர் இருந்தா தேவலை....?!!) நம் வீட்டில் கல்லூரி செல்லும் பிள்ளைகளோ, அல்லது வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளோ  இருந்தால் இனியாவது அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கவனியுங்கள்....சொல்லமுடியாது உங்கள் பிள்ளை வீட்டுக்கு வெளியே ஒரு வீட்டை ரெடி செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கலாம்...!?? (உண்மையை சொல்றேங்க...!?) 

யோசியுங்கள் பெற்றோர்களே !

பிள்ளைகள் இப்படி செய்வதற்கு பெற்றோர்கள்  எப்படி காரணமாவார்கள் என்று நினைக்ககூடாது. வீட்டில் கிடைக்காத  அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...! மேலும் இது  முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான்  என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. எல்லோரின் மனதுமே  ஒரு சின்ன அங்கீகாரம், ஆதரவாய் சாய ஒரு தோள், அன்பாய் தலை வருட ஒரு கரம், நிம்மதியாய் உறங்க ஒரு மடி இவற்றுக்காக தான் ஏங்குகிறது என்று கருதுகிறேன்..... இல்லை என்று யாரும் மறுக்க முடியாது  அல்லவா  ....?!

இதை தேடித்தான் ஓடுகிறார்கள், அவர்களாகவே இப்படி ஒன்றை ஏற்படுத்தி நிம்மதி, சந்தோசம் காண முயலுகிறார்கள், அவசர முடிவு   என்று தாமதமாக உணர்ந்து அதில் இருந்து அதே அவசரமாக விடுபடுகிறார்கள்....ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது.....விளைவு குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வேதனை கடைசியில் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது.....!!? என்ன படிச்சி, என்ன சம்பாதித்து என்ன பலன்....இனி வாழ்க்கையின் பக்கங்கள் அனைத்தும் வெறும் வெள்ளை காகிதம் போன்றது தான்....!?        

என்ன முடிவு...?

மற்ற மாநிலத்தவர்களை விடுங்கள்...தமிழர்களுக்கு என்று பெரிய பாரம்பரிய கலாசாரம் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து போக போய்தான் இந்த மாதிரி சீர்கேடான  புது நாகரீகம் தலையெடுக்க தொடங்கிவிட்டது. என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...? நாடு முழுவதும் யோசிக்க வேண்டிய சர்ச்சைக்குரிய  ஒரு விஷயம் இது. பல பட்டிமன்றங்கள் கூட நடை பெறலாம், இப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த
வேண்டுமா என்று ...??