ஹெச்.ஐ.வி எய்ட்ஸும் ஹோமோ செக்ஸுவாலிடியும்
இதனை
போன்ற ஒரு சென்ஸிடிவ் விசயங்களை எழுதுவதா வேண்டாமா என்று பல முறை யோசித்து
பின்னர் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற
கட்டாயத்தால் இதனை எழுதுகிறேன்.
என்னுடைய நண்பர் ஒருவர் Gay
எனப்படும் ஹோமோசெக்ஸுவல், அவர் தற்செயலாக இங்கு ரத்த தானம் கொடுக்க சென்ற
போது அவரை பற்றி அறிந்து கொண்ட மருத்துவர்கள், ஹோமோசெக்ஸுவல் ஆண்களிடம்
STD, HIV மற்றும் Viral Hepatitis போன்ற நோய்கள் அதிக அளவில் இருப்பதாக
உறுதிபடுத்தபட்டு இருப்பதால்அவரின் ரத்தத்தை வாங்க மறுத்து
விட்டதாக கூறினார் http://www.fda.gov/BiologicsBloodVaccines/BloodBloodProducts/QuestionsaboutBlood/ucm108186.htm.
இது என்ன புது கதையாக இருக்கிறதே என்று நினைத்து செய்தியை தோண்டிய போது கிடைத்த செய்திகள் ஆதாரங்கள் வருத்தமடைய செய்தன.
CDC யின் அறிக்கை படி (http://www.cdc.gov/hiv/topics/surveillance/basic.htm#international), MSM எனப்படும் ஆண்களிடம் உறவு வைத்து கொள்ளும் ஆண்களுக்கே HIV தொற்று ஏற்படும் பெரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கிறது. இது பெண்களிடம் இருந்து பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரவுவதை விட மிக அதிகம்.
இந்தியாவில் என்ன நிலை என்றறிய இணையத்தை தோண்டிய போது
NACO எனப்படும் National Aids Control Organisation ம் ( http://www.nacoonline.org/Quick_Links/HIV_Data/)அவர்ட் எனப்படும், (http://www.avert.org/aidsindia.htm )
International HIV & AIDS charity நிறுவன அறிக்கைகளையும் படிக்க
நேர்ந்தது. அதன் படி, இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் கூட இதே நிலை
தான் என்றறிய முடிந்தது.
எய்ட்ஸ் பெண்களிடம் இருந்து பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் தான் பரவும், ஆண்களிடம் உறவு கொண்டால் பரவாது என்ற மூட நம்பிக்கை எப்படியோ இந்திய சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது.
இந்த நம்பிக்கையிலேயே தற்போது MSM ங்கள் அதிகரித்து இருப்பதாக நினைக்கிறேன்.
சில நாட்களுக்கு முன் மதுரை அருகே ஒரு 8 வயது சிறுவன் சில சிறுவர்களால் வண்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறான் (http://timesofindia.indiatimes.com/city/chennai/Four-teens-held-for-raping-murdering-Madurai-boy/articleshow/9319095.cms) என்ற செய்தி படித்ததும் பகீர் என்றது.
அதுவும் கொலை செய்த சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதனை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவில் இதனை குறித்த விழிப்புணர்ச்சியை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அதே போல செக்ஸ் கல்வி கட்டாயம் ஆக்கபட வேண்டுமோ என்றும் தோன்றுகிறது.
ஹார்மோன் கோளாறு, மற்றும் உளவியல் மாற்றம் தான் எல்லா நாட்டிலும் ஓரினசேர்க்கை உருவாக காரணம்
The Analyst said... அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஆண்களும் ஒரு போதும் இரத்ததானம் செய்ய முடியாது என எனக்கு இப்போது தான் தெரியும். எல்லா நாடுகளிலும் இவ்வாறல்ல. இங்கிலாந்தில் அண்மையில் தான் இந்த தடையை நீக்கினார்கள். ஆனால் அங்கும் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு மட்டும் இரத்த தானம் செய்ய முடியாது என உண்டு. இங்கு NZ இல் 5 வருடம் பொறுக்க வேண்டும்.
ஆண்கள் ஆண்களுடன் உறவு கொள்வதால் HIV கூடுதலாகப் பரவுவது ஏன் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டும். Sexual act தான் காரணமே ஒழிய அவ்வுறவு அல்ல. ஆண்கள், ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது அவர்களுக்கிடையே குத வழி மூலம் பாலுறவு வைத்துக் கொள்வது ஆண்-பெண் உறவுகளை விடக் குறிப்பிட்டளவு கூட. குதவழி மூலம் பாலியல் உறவு கொள்ளலால் HIV பரவும் விகிதம், பெண்ணுறுப்பின் மூலம் உறவு கொள்ளும் போது பரவும் விகிதத்தை விட குறிப்பிட்டளவு அதிகம். அதனாலேயே ஆண்-ஆண் உறவில் HIV கடத்தப்படும் விகிதம் கூட. So I think it's the sexual act the authorities need to worry about,r ather than sexual orientation and ask people at the interview about that. ஏனெனில் ஆண்-பெண் உறவுகளிலும் குதவழி மூலம் பாலியல் உறவு கொள்பவர்கள் உண்டு. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறுதியான monogamous உறவு வைத்திருப்பாரெனில் அவருக்கு HIV இருக்கும் சந்தர்ப்பம் குறைவே. அவரை இரத்த தானம் செய்யத் தடை செய்வது discrimination அல்லவா? Spain ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் இரத்த தானம் செய்வதைத் தடுப்பதில்லை. ஆனால் ஒருவரை விடக் கூடுதலானவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்தவர்கள் (அவர்கள் ஆணோ பெண்ணோ) அடுத்த ஒருவருடத்திற்கு இரத்த தானம் செய்ய முடியாது. இது நியாயமாகப் படுகிறது எனக்கு. ஏனெனில் ஒரு பாதுகாப்புமின்றிப் பலருடன் தொடர்பு வைத்திருப்பின் நிச்சயம் HIV கடத்தப்படும் விகிதம் அதிகமே.
"இந்த நம்பிக்கையிலேயே தற்போது MSM ங்கள் அதிகரித்து இருப்பதாக நினைக்கிறேன்."
இதனால் homosexuality அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கென ஏன் நினைக்கிறீர்கள்?
"சில நாட்களுக்கு முன் மதுரை அருகே ஒரு 8 வயது சிறுவன் சில சிறுவர்களால் வண்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறான் என்ற செய்தி படித்ததும் பகீர் என்றது.
அதுவும் கொலை செய்த சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். "
:( மிகவும் துக்கரமான விடயம். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் HIV இப் பற்றி ஒருகணமேனும் நினைத்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா?
"இதனை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவில் இதனை குறித்த விழிப்புணர்ச்சியை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அதே போல செக்ஸ் கல்வி கட்டாயம் ஆக்கபட வேண்டுமோ என்றும் தோன்றுகிறது."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக