வந்தது யாரு?
(சிறுகதை)
“அடுத்தாளு யாரம்மா?...அட நம்ம சுந்தரியா?...வாம்மா..வந்து வாங்கிக்க இந்த வாரக் கூலிய!...ஓ...பரவாயில்லயே...நூத்தம்பது ரூபா வாங்கிட்டே...லீவே போடாம...வந்துட்டே போலிருக்கு!...சரி...சரி...நவுரு அடுத்தாளு வரட்டும்...” காண்ட்ராக்டர் சித்தாளுகளை நக்கலடித்தபடியே கூலியை வினியோகம் செய்து கொண்டிருந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மேஸ்திரி பரமனுக்கு எரிச்சலாயிருந்தது.
ஒரு வழியாக எல்லோருக்கும் கூலி கொடுத்து முடித்த காண்ட்ராக்டர் மேஸ்திரிக்கும் தர, வாங்கிக் கொண்டு அவசர அவசரமாகச் சென்று சைக்கிளை எடுத்தார் மேஸ்திரி. காற்று இற்ங்கிக் கிடந்த பின் சக்கரம் அவரைப் பார்த்து சிரித்தது.
“அடக் கெரகமே..சமயத்துல காலை வாரிடுச்சே!” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சைக்கிளைத் தள்ளியபடி நடக்க ஆரம்பித்தார்.
“என்னங்க மேஸ்திரி சைக்கிள் என்னாச்சு?...தள்ளு மாடல் வண்டி ஆயிடுச்சா?” சிரித்தபடியே கேட்டாள் சித்தாள் சுந்தரி.
“அட அமாம் புள்ள...டயர் பஞ்சர் ஆயிடுச்சு!” என்று கூறியவர், அவளுடன் பேசிக் கொண்டே நடையைத் தொடர்ந்தார்.
“ஏம் புள்ள...உன்ர வூடு எங்க இருக்கு?”
“உங்க வூடு தாண்டி நாலாவது சந்துக்குள்ளார போனா மொத வூடு என்ர வூடு தான்!” வெற்றிலை எச்சிலை “புளிச்” செய்தபடியே பதில் சொன்னாள் சுந்தரி.
“அப்பன்...ஆத்தா...யாராலும் கூட இருக்காங்களா?”
“ம்...அப்பனுமிருக்கான்...ஆத்தாளும் இருக்கா!”
இதற்குள் வீடு வந்து விட, “வா புள்ள...ஒரெட்டு உள்ளார வந்து...ஒரு தம்ளர்..காப்பித் தண்ணி குடிச்சிட்டுப் போ”
முதலில் “வேண்டாமுங்க!” என்று கூறி ரொம்பத் தயங்கியவள், மேஸ்திரியின் வற்புறுத்தலால் அரை மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
இரண்டு வயதுக் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வந்து நின்றாள் மேஸ்திரியின் மனைவி. “யாரு மச்சான் இது?” கேட்டாள்.
“அட...இவ எனக்குக் கீழ வேலை பார்க்கற சித்தாளுடி..பேரு சுந்தரி”
ஏனோ தெரியவில்லை...மேஸ்திரியின் மனைவி ரங்கம்மா முகத்தில் வெறுப்பு குடி கொண்டது.
“இவ என்னத்துக்கு இங்க வந்திருக்கா?” எரிச்சலுடன் கேட்டாள்.
“ஏய்...என்ன புள்ள இது?...வூட்டுக்கு வந்தவியள எதுக்குன்னு கேட்கறே?” மனைவியை அதட்டினார் மேஸ்திரி.
“அதில்ல...சும்மாத்தான் வந்திருக்காகளா...இல்ல ஏதாச்சும் ஜோலியா வந்திருக்காகளான்னு கேட்டேன்” வெறுப்புடன் சொன்னாள்.
“ஏய்....போய் ஒரு டம்ளர் காப்பித் தண்ணி போட்டுக் கொண்டாடி அவளுக்கு” மேஸ்திரி பரமன் ச்ற்று அதட்டலாகவே சொன்னான்.
மிகுந்த தர்ம சங்கடத்துடன் மேஸ்திரியின் மனைவி கொடுத்த காப்பியை வாங்கிப் பருகிய சுந்தரி உடனே விடை பெற்றாள்.
அவள் போனவுடன், “ஏண்டி முண்டம்....உனக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா?...வந்தவங்க முன்னடி இப்படியா பேசறது?...இப்படியெல்லாம் பேசினா யாராச்சும் வீட்டுக்கு வருவாங்களா?”
“ஏன்...ஏன்...அய்யாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது அவளைப் பேசினா?....அவ மேல அத்தனை அக்கறையா...இல்ல ஆசையா?” தன் முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டாள்.
“ஏய்...செருப்பு பிஞ்சுடும்டி....நரம்பில்லாத நாக்குல வரம்பில்லாமப் பேசாதடி”
“மேஸ்திரிகள்ன்னா சித்தாளுகளை வப்பாட்டியா வச்சுக்குவாங்க-ன்னு ஊரு உலகம் சொல்லுறது நெஜந்தான் போலிருக்கு...ஏன் மச்சா நீ அவளை வெச்சிருக்கறியா?...வேண்டாம்யா... நாந்தான் ரோசாவாட்டம் இருக்கேனில்லே” கோபத்தில் ஆரம்பித்த ரங்கம்மா அழுகையுடன் முடித்தாள்.
“அட என்ன புள்ள இது?...நீயே இல்லாததையும்...பொல்லாததையும் நினைச்சுக்கிட்டு..அழுவறே!..உனக்கென்ன பைத்தியமா?”
‘ஆமாம்யா...உன்ர மேல உசுரையே வெச்சிருக்கற நான் பைத்தியக்காரிதான்...வேணாம் மச்சான்...இனிமே எந்தச் சிறுக்கியையும் வூட்டுக்குக் கூட்டியாராதே மச்சான்” அழுகையைத் தொடர்ந்தாள். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் பரமன் திண்டாடிப் போனான். பாவம்!...அவந்தான் என்ன செய்வான்...அவன் மனைவி ரங்கம்மா படிக்காதவள். பக்கத்து வேஸ்ட் காட்டன் மில்லுல பஞ்சு புடுங்கற வேலைக்குப் போறா...அப்பப்ப புருஷன் மேல் சந்தேகம் வரும்....அதற்குக் காரணம்,,புருஷன் மேலுள்ள அளவு கடந்த பாசம்...அன்பு...இன்னும் என்னென்னவோ...!
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் லேசான மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்த பரமன் வாசலில் ஒரு பைக் நின்று கொண்டிருப்பதைக் கண்டு “யாராயிருக்கும்?” என்ற யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே அசத்தலாக பேண்ட் சர்ட் அணிந்திருந்த சுமார் இருபத்தாறு வயது மதிக்கத்தக்க டிப்டாப் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
“ஏ புள்ள..இங்க வா புள்ள!”
வெளியே வந்த ரங்கம்மா கணவனைப் பார்த்து “வாங்க!” என்று கூறி விட்டு, அந்த இளைஞனைப் பார்த்து, “இவருதாங்க...என் வீட்டுக்காரர்!” என்றாள்.
“அப்படியா?” என்ற அந்த இளைஞன் பரமனைப் பார்த்து லேசாய் புன்னகைத்து விட்டு, ‘சரி...ரங்கம்மா...நான் கிளம்பறேன்...மழை விட்டிடுச்சு போலிருக்கு” என்ற்படி எழுந்தான்.
‘அட இருங்க சார் காப்பித் தண்ணி போட்டுட்டு இருக்கேன் ஒரு வாய் குடிச்சிட்டுப் போலாம்!” என்றாள்.
“பரவாயில்லை ரங்கம்மா...இன்னோரு நாள் வர்றேன்” என்ற அவன் வெளியேறப் போகையில், பரமன் தன் மனைவியிடம் கேட்டான். “ஏண்டி நான் யாருன்னு அவருகிட்ட சொன்னே...அதே மாதிரி அவரு யாருன்னு என்கிட்ட சொன்னா என்ன கொறைஞ்சா போய்டும்?”
“அட அதை மறந்துட்டேன் பாருங்க!.. இவரு எங்க வேஸ்ட் காட்டன் மில்லுல சூப்பர்வைஸர்...நம்ம வீடுன்னு தெரியாம மழைக்கு இங்க ஒதுங்கி நின்னாரு....நான் யாருடா?ன்னு எட்டிப் பார்த்தேன்...இவரு...அதான் வலுக்கட்டாயமா உள்ளார கூப்பிட்டு உக்கார வெச்சேன்..ஆனா பாருங்க ஒரு வாய் காப்பித் தண்ணி கூட குடிக்காம போறாரு!” என்றாள்.
அந்த டிப்டாப் இளைஞன் சாவகாசமை வெளியேறி பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான். அவன் போவதையே கதவருகே நின்று பார்த்து கொண்டிருந்த ரங்கம்மா வீட்டுக்குள் திரும்பினாள்.
“ஏண்டி...வேஸ்ட் காட்டன் மில்லுக்கு வேலைக்குப் போற பொம்பளைங்க அங்கிருக்கற சூப்பர்வைஸர் கிட்டே கொஞ்சம் அப்பிடி..இப்படி இருப்பாங்கன்னு நான் கேள்விப் பட்டிருக்கேன்...இப்ப நேரிலேயே பார்த்திட்டேன்!..எத்தனை நாளா இது நடக்குது”
“மச்சான்...வேண்டாம் மச்சான்!..நாக்கு அழுகிப் போகும்...கண்டபடி பேசாதீங்க!” அழ ஆரம்பித்தாள்.
“பேசுவேண்டி...உன்னைய இனிமே வேலைக்கு அனுப்பாம...வீட்டோட வெச்சாத்தான் திருந்துவே!” கத்திக் கொண்டே வேகமாக வெளியேறினான்.
இரவு பத்து மணி வாக்கில் வீட்டுக்குள் நுழைந்த பரமன் கோபமாய் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்த மனைவி ரங்கம்மாவிடம் வந்து , “ஏம் புள்ள...கோபமா?” என்று குழைந்தான்.
“க்கும்...கண்டபடி...வாய்க்கு வந்ததெல்லாம் பேசிப் போட்டு...இப்ப மட்டும் என்ன கொஞ்சல்?” அவன் கைகளைத் தள்ளி விட்டாள்.
“நீ எப்படி எதேச்சையாய் வந்த சூப்பர்வைஸரை வீட்டுக்குள்ளார கூட்டிட்டு வந்தே?...அதே மாதிரிதான் நானும் அன்னிக்கு அந்தச் சித்தாளு சுந்தரிய ஒரு வாஇ வார்த்தைக்கு, “உள்ளார வந்திட்டுப் போ புள்ள”ன்னு கூப்பிட்டேன், அவளும் யதார்த்தமா வந்தா...அதுக்குப் போயி...நான் அவளை வச்சிருக்கேன்..அதுஇதுன்னு குதிச்சே!..இப்பப் புரியுதா?“ நாசூக்காகப் பேசினான்.
தன் கணவன் கண்களையே இரண்டு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தவள், சடாரெனக் கட்டிப் பிடித்து அவன் கன்னங்களில் அவேசமாய் முத்தமிட்டாள். “மன்னிச்சுக்க மச்சான்”
“சரி..சரி...எப்படியோ நீ புரிஞ்சுக்கிட்டியானா அது போதும்” என்றான் பரமன்.
(முற்றும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக