அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை தாயரித்து முடித்திருந்தசமயம், அந்த அணுகுண்டை 'ராபர்ட் ஓப்பன் ஹீமர்' என்ற விஞ்ஞானி மேற்ப்பார்வை செய்துவந்தார்.
அணுகுண்டை தயாரித்து முடித்ததும் அது தொடர்பான நுணுக்கத் தகவல்களை
அளிப்பதற்காக ஓப்பன் ஹீமர் விஞ்ஞானிகள் மாநாடு ஒன்றைக் கூட்டியிருந்தார்.
அந்த மாநாட்டில் ஏராளமான விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். ஹீமர் அணுகுண்டு
தொடர்பான தொழில்நுட்பத்தகவல்களையும் , அதன் அழிவுச் சக்தியையும் விளக்கிப்
பேசினார். அப்போது ஒரு விஞ்ஞானி எழுந்து , " இந்த அணுகுண்டையும் விஞ்சிய சக்தி வாய்ந்த வேறு ஆயுதம் உண்டா?" என்று ஒரு கேள்வி கேட்டார்.
"நிச்சயமாக இருக்கிறது . அந்த ஆயுதம் மட்டும் பிரயோகிக்கப்பட்டால் அணுகுண்டு இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்" என்றார் ஹீமர்.
"அது என்ன ஆயுதம்?" என்று எல்லா விஞ்ஞானிகளும் பரபரப்புடன் கேட்டனர். அதற்கு விஞ்ஞானி ஓபன் ஹீமர் புன்னகை புரிந்தவாறே "
சமாதானம்தான் அந்த ஆயுதம். உலகநாடுகள் அனைத்தும் போர் வெறியைவிட்டு
சமாதான சகவாழ்வை மேற்கொள்ள முற்பட்டால் இந்த அணுகுண்டை குப்பைதொட்டியில்
தான் வீசி எரிய வேண்டும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக