அமெரிக்காவில் போர்ட்ஸ்மவுத் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் ஹை
ஹீல்ஸ் அணிவது அவர்களுக்கு கவர்ச்சியை தருகிறது என தங்களது ஆய்வில்
தெரிவித்துள்ளனர்.
பெண்கள் குழு
இதற்காக பெண்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் டிரட்மில் எனப்படும் நடை பயிற்சி சாதனத்தில் சாதாரண காலணி அணிந்தும், ஹை ஹீல்ஸ் அணிந்தும் நடந்தனர். அவ்வாறு நடந்து செல்வதை ஆய்வாளர்கள் படம் பிடித்தனர். அது 30 வினாடிகள் ஓடுவது போல் தயாரிக்கப்பட்டன.
பார்வையாளர்கள் கருத்து
பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் கொண்ட மற்றொரு குழு முன் அவை திரையிடப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்களது பதிலில், ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்கள் கவர்ச்சிகரமாக இருந்தனர் என தெரிவித்திருந்தனர். மேலும், பெண்களின் உடலில் சில பகுதிகளை சுற்றி ஒளி தெரியும்படியான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் உடலின் குறிப்பிட்ட பாகங்களை சரியாக காண முடியும். மற்றொரு சோதனை முயற்சியாக, நடந்து வருபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என்பது குறித்து பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்க கேட்டு கொள்ளப்பட்டனர். தட்டையான காலணிகளை பெண்கள் அணிந்தபோது அவர்கள் ஆண்கள் போல் காட்சியளித்தனர் என பெரும்பான்மையினர் தெரிவித்தனர். பெண்களின் கால் பகுதிகளில் நடந்து வரும்போது ஏற்படும் மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஹை ஹீல்ஸ் அணிந்தபோது அதிக அ
ளவில் பெண் தன்மை வெளிப்பட்டது. கூடுதலாக அவர்களின் இடை அதிகமாக அங்குமிங்கும் சென்று பார்ப்பவர்களை ஈர்த்தது.
ஆய்வாளர்கள் முடிவு
இதனடிப்படையில் ஆய்வாளர்கள், பெண்களின் நடையில் பாலியல் ஈர்ப்பை அதிகப்படுத்தி காட்டும் அம்சங்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படுகிறது. இதனால் ஆண்கள் அதிக அளவில் பெண்கள் பக்கம் தங்களது கவனத்தை செலுத்துகின்றனர் என கூறியுள்ளனர்.
ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ வழக்கமாக தனது ஹை ஹீல்ஸ் காலணிகளில் ஒன்றில் அரை இஞ்ச் அளவிற்கு குறைத்து அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். அவரே, ஹை ஹீல்ஸ் காலணிகளை கண்டறிந்தவர் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் அனைவரும் அவருக்கு கடன் பட்டுள்ளோம் என முன்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.